பேரவையின் குறள் தூதர்2019-06-21T01:38:09+00:00
பெற்றோரும் ஆசிரியரும் கற்றுத்தந்து மனதில் பதித்த குறள்களை நாவால் உதிர்த்து, உங்கள் ஞாபக சக்தியை ஞாலத்திற்கு காட்டி பேரவையின் குறள் தூதராய் பட்டம் பெற “குறள் தூதர்” போட்டி!

நிலைகள் மற்றும் வயது வரம்பு (Levels and Age limits)

நிலைகள் வயது வரம்பு+ தகுதிக்கான குறைந்த பட்ச குறள்களின் எண்ணிக்கை
மழலைத்தூதர் 5 வயது வரை 25
இளந்தூதர் 5 வயதுக்கு மேல் 17 வயது வரை 100

+ சூன் 30, 2019 அன்று வயது

அணி விவரம்

 • குறள் தூதர் போட்டி தனிப் போட்டியாளர்களுக்கான (individual competition) போட்டி
 • அணியாக போட்டியித் தேவையில்லை

போட்டி தேதி/இடம்

 • அனைத்து போட்டிகளும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படும்

போட்டி வடிவம்

 • இந்தப் போட்டி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மூலம் மட்டுமே நடத்தப்படும்.
 • உங்கள் குழந்தையை இன்னும் தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்திருக்காவிட்டால், போட்டியில் கலந்து கொள்ள உங்கள் அருகில் உள்ள தமிழ்ப்பள்ளியையோ தமிழ்ச்சங்கத்தையோ அணுகவும்
 • இந்தப் போட்டி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தமிழ்ப் பள்ளி அல்லது தமிழ்ச்சங்கங்களின் மூலம் நடத்தப்படும். உங்கள் குழந்தையை இன்னும் தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்திருக்காவிட்டால் உங்கள் அருகில் உள்ள தமிழ்ப்பள்ளியையோ தமிழ்ச்சங்கத்தையோ அணுகவும்
 • அதிக திருக்குறள்களை தவறின்றி ஒப்பிக்கும் பங்கேற்பாளர்களுக்கு பேரவையின் குறள் தூதர் பட்டம் அளிக்கப்படும்
 • அனைத்துத் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்
 • ஒவ்வொரு பள்ளியிலும் அதிக குறள்கள் சொல்லும் 5 பங்கேற்பாளரின் பெயர் மற்றும் புகைப்படம் பேரவை வலைத்தளத்தில் வெளியிடப்படும்
 • அதிக குறள்கள் ஒப்புவித்த குழந்தைகளின் விவரத்தை பள்ளி அல்லது தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்கள், குறள் தூதர் விதிகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தில் (google form) மே மாதம் 15ம் தேதிக்குள் பதிவிட வேண்டும்

மதிப்பெண் (scoring) விதிகள்

 • மிகச் சரியாக சொல்லப்படும் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்
 • போட்டியை நடத்தும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் எந்த வித உதவியும் செய்ய இயலாது. உதவி கேட்டு ஒப்பிக்கப்படும் குறளுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது

போட்டிக்கு தயாரித்தல்

 • பங்கேற்பாளர் ஒப்பிக்கப்போகும் திருக்குறள்களை தெளிவாக எழுதியோ, அச்சடித்தோ ஆசிரியரிடம் வழங்க வேண்டும்
 • அச்சடித்த பட்டியலில் உள்ள திருக்குறள்களை பங்கேற்பாளர் தவறின்றி சொல்ல வேண்டும்

பரிசு விவரம்

 • ஒவ்வொரு பள்ளியிலும் அதிக குறள்கள் சொல்லும் 2 பங்கேற்பாளரின் பெயர் மற்றும் புகைப்படம் பேரவை வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
 • அனைத்து பங்கேற்பாளர்களிலும் அதிக குறள்கள் கூறும் 5 குழந்தைகளுக்கு பேரவை தூதர் பட்டம் வழங்கப்படும்
 • அதிக குறள்கள் கூறியவர்களில், பேரவை விழாவில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே பேரவை தூதர் பட்டம் வழங்கப்படும்.

பதிவு செய்ய

 • பதிவு செய்ய இறுதி நாள் 31.மே.2019
 • போட்டிகளுக்கான பதிவுக்கட்டணம் 10 வெள்ளிகள் ($10 USD). இந்த கட்டணம் போட்டி பரிசுகளின் நிதியில் சேர்க்கப்படும்

தொடர்பு கொள்ள