தமிழ்த்தேனீ போட்டி அழைப்பு2019-06-24T05:29:11+00:00

தேன் தமிழைத் தெளிவுறக் கற்ற நற்றமிழ்ச் செல்வங்களுக்கு அத்தமிழ்த் திறனை தரணிக்குக் காட்டிட முப்பெரும் விழாவில் தனிப்பெரும் வாய்ப்பு – குழந்தைத் தேனீக்களுக்குள் ஒரு “தமிழ்த் தேனீ” தேடல்!

நிலைகள் மற்றும் வயது வரம்பு (Levels and Age limits)

(தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே “தமிழ்த் தேனீ” போட்டியில் பங்கு பெறலாம்)

நிலைகள் வயது வரம்பு# கேள்வி வடிவம்+
அரும்புகள் 8 வயது வரை
  • படங்கள் பார்த்து அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்கள் கூறுதல்
  • ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கூறுதல்
மலர்கள் 12 வயது வரை
  • தமிழ்ச் சொற்களை தவறின்றிப் படித்து ஆங்கிலப் பொருள்கள் கூறுதல்
  • பொது அறிவு வினாடி வினா (முற்றிலும் தமிழில்)*
கனிகள் 17 வயது வரை
  • பொது அறிவு வினாடி வினா (முற்றிலும் தமிழில்)*
  • “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” வடிவத்தில் தமிழ்ச் சொல் விளையாட்டு*

# சூன் 30, 2019 அன்று வயது
* இதற்குண்டான சொல் வங்கியும் கேள்வி பதிலும் முன்னமே வழங்கப்படும்
+ பல அணிகள் சம மதிப்பெண்கள் பெற்றால், அதை தவிர்க்க (Tie-breaker) “சவால் சுற்று” நடத்தப்படும். அதற்கான விவரங்கள் போட்டி விதிகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

பதிவு விவரம்

  • 2018-19 கல்வி ஆண்டில் தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ்ப் பள்ளிக்கு செல்லும் மாணாக்கர்கள் மட்டுமே தமிழித்தேனீ 2019இல் பங்கு பெறமுடியும்
  • போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணாக்கர் ஏதேனும் ஒரு நிலைக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்
  • குறிப்பிட்ட போட்டி நிலைக்கு பதிவு செய்த பின், நிலைகளில் மாற்றம் என்பது இயலாது. உதாரணம்… ஒரு ஒன்பது வயது மாணவர் அவரின் வயதுக்கு பொருத்தமான மலர்கள் நிலையில் பதிவு செய்ய முடியும். விரும்பினால் மேல் நிலையாம் கனிகளில் பதிவு செய்ய இயலும். ஆனால் அவரின் வயதிற்கு கீழ் நிலைக்கு பெயர் பதிவிட இயலாது. பதிவு செய்த பின், நிலைகளில் மாற்றம் என்பது இயலாது
  • பள்ளி நிலை போட்டி தான் முதல் நிலை போட்டி. அப்போட்டியின் இறுதியில் தேர்வு செய்யப்பட்ட அணிகளை சேர்ந்த மாணாக்கர்களை அவர்களின் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பேரவை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்
  • முதல் நிலை பள்ளி போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, போட்டியில் தொடர, ஒவ்வெரு மாணவரும் தலா $10 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அக்கட்டணத்தை பள்ளி ஒருங்கிணைப்பாளர் பெற்று, பள்ளியின் சார்பாக போட்டியில் பங்குபெறும் அணிகளைச் சேர்ந்த மாணாக்கர்களின் பெயர்களை பதிவு செய்து கட்டணத்தையும் பேரவை இணையத்தளத்தில் ஏப்ரல் 28க்கு முன் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் போட்டி பரிசுகளின் நிதியில் சேர்க்கப்படும்
  • இறுதிப் போட்டிகள் அனைத்தும் பேரவை விழா அரங்கில் நடைபெறும். எனவே பங்கேற்பாளர் பேரவை விழா நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்திருத்தல் அவசியம்

அணி விவரம்

  • ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், அனைத்து நிலைகளுக்கும் அணிகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. எதாவது ஒரு நிலைக்கான மாணவர்கள் இல்லையென்றால், அந்த நிலையைத் தவிர்த்துக் கொள்ளலாம்
  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் (அதிக பட்சம்) மூன்று அணிகள் (ஒவ்வொரு நிலையிலும் முதலிடம் பெரும் அணி) மண்டலப் போட்டிக்கு (Zonal competition) அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு நிலைக்கான வயது வரம்பில் உள்ள இரண்டு மாணாக்கர்கள் பங்கெடுக்கலாம்

போட்டி வடிவம்

  • போட்டிகள் பள்ளி நிலை, மண்டல நிலை, அரை இறுதி, இறுதிப்போட்டி என நான்கு நிலைகளாக நடத்தப்படும்
  • பள்ளி நிலைப் போட்டிகள் அவர்தம் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களாலேயே நடத்தப்படும்.
  • பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவையான உதாரண கேள்வி பதில்கள் வழங்கப்படும்.
  • மண்டலப் போட்டிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படும். மண்டலப் போட்டிகளுக்கான பாடத்திட்டம், கேள்வி பதில், மற்றும் உதாரணங்கள் பங்கேற்பாளர்களுக்கு முன்னமே கொடுக்கப்படும்.
  • ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் ஒவ்வொரு நிலையிலும் முதலிடம் பெரும் அணி, சிகாகோவில் நடைபெறும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் .
  • அரை இறுதிப்போட்டியில் ஒவ்வொரு நிலையிலும் முதல் நான்கு இடங்களை பெரும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
  • இறுதிப்போட்டியின் மதிப்பெண்களை கணக்கிட்டு ஒவ்வொரு நிலையிலும் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு பெரும் அணிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்படும்.

போட்டி தேதிகள்

போட்டி ஆரம்ப நாள் முடியும் நாள்
பள்ளி அளவிலான போட்டிகள் மார்ச்சு 1 மார்ச்சு 31
மண்டல அளவிலான போட்டிகள் மே 1 மே 31
அரைஇறுதிப் போட்டிகள் சூலை 4 சூலை 5
இறுதிப்போட்டி சூலை 5
பரிசளிப்பு சூலை 5

பரிசு விவரம்

  • ஒவ்வொரு நிலையிலும் முதல் நான்கு இடங்களை பெரும் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்படும்
  • பரிசுத் தொகை பின்னர் அறிவிக்கப்படும்
  • பேரவை விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களும், அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டியில் பங்கு பெற்றவர்களும் பேரவை மேடைக்கு வரவழைக்கப்பட்டு வாழ்த்தி, ஊக்குவிக்கப்படுவார்கள்

தொடர்பு கொள்ள

போட்டிக்கான கையேடு (Guideline)