இலக்கிய விநாடி வினா

இலக்கிய விநாடி வினா2019-04-14T19:34:38+00:00

நிகழ்ச்சி வடிவம்:

விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற பதிவு செய்தவர்களைக் கொண்டு இரண்டு அணிகள் அமைக்கப்படும். அணிக்கு ஒரு தலைவரும் அவருக்கு உதவியாக ஒரு துணைத் தலைவரும் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்விரு அணிகளுக்குப் பொருத்தமான பெயர்களும் சூட்டப்படும்.

பாடத் திட்டங்கள்:

 • படிக்க வேண்டிய பாடங்களுக்கு வேண்டிய ஆவணங்கள் பங்கேற்பாளர்களுக்குக் முன்னாதாகவே கொடுக்கப்படும்.
 • முந்தைய ஆண்டுகளின் விநாடி வினா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மாதிரிகளும் கொடுக்கப்படும்.

பயிற்சியளிப்பு:

 • ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாகச் சுமார் மூன்று மாதங்கள் பயிற்சியாளர் பயிற்சியளிப்பார்.
 • அணித் தலைவர்கள் தங்கள் அணி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பாடங்களைப் பிரித்துக்கொடுத்து மேற்பார்வை செய்து வருவார்கள்.
 • பயிற்சிகான சிறப்புச் சொற்பொழிவுகள் முறையாக‌ ஏற்பாடு செய்யப்படும்.

விதிமுறைகள் (சிறு தொகுப்பு):

 • நிகழ்ச்சியில், முதல் திரையில் கேள்வி வரும். குறிப்பிட்ட நேரம்
 • முடிந்தவுடன் விடை அடுத்த(இரண்டாம்) திரையில் வரும்.
 • குறிப்பிட்ட அணியின் விடை தவறாகவோ அல்லது நேரம் முடிந்து விட்டாலோ, அந்தக் கேள்வி அடுத்த அணிக்கு கேட்கப்படமட்டாது.
 • விடையளிக்க ஒரே ஒரு வாய்ப்புதான் உண்டு.
 • நடுவர்கள் சரி/ தவறு பார்த்து, மதிபெண்களைக் கணக்கிடுவார்கள். நிகழ்ச்சியின்போது கைப்பேசி, மடிக்கணினி, நூல்கள், ஆவணங்கள் முதலியன‌ பயன்படுத்தக் கூடாது.
 • அணிகள் தங்களின் சீருடைகளைத் தேர்வு செய்து, அணிந்து மேடையில் இரண்டு குழுக்களாக‌ அமர்ந்திருப்பார்கள்.

நிகழ்ச்சி நடத்துனர்கள்:

ஒவ்வொரு அணிக்கும் கிழே கண்ட நிர்வாக உறுப்பினர்கள் இருப்பர்.

 • ஒரு ஒருங்கிணைப்பாளர்
 • ஒரு துணை ஒருங்கிணைப்பாளர்,
 • ஒரு பயிற்சியாளர்,
 • ஒரு அணித்தலைவர்கள்/
 • ஒரு துணை அணித்தலைவர்,

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு

 • இரண்டு நிகழ்ச்சி நடத்துனர்கள்,
 • ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்

பேரவைக்கு எந்தவித செலவும் இல்லாமல், மிகுதியாக‌ மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பது இதன் பெருமை. நிகழ்ச்சியின் முடிவில் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டு – எந்த அணி அதிக மதிப்பெண் பெற்றது என்பதும் அறிவிக்கப்படும். வெற்றி தோல்விகளைத் தாண்டி, தமிழ் இலக்கியங்களை படிப்பதோடு புதிய‌ நண்பர்கள் அறிமுகம் கிடைப்பதற்கும் இந்நிகழ்ச்சி பெரும் வழிவகுக்கிறது.

பதிவு செய்திட (Register)