குறள் தேனீ போட்டி அழைப்பு

குறள் தேனீ போட்டி அழைப்பு2019-06-21T01:37:27+00:00

அமெரிக்க மண்ணில், வள்ளுவரின் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் புகழ் ஓங்க தமிழ்ச்சங்கப் பேரவை மேடையில் உங்கள் குழந்தைகளின் திருக்குறள் திறன் ஒளிர குழந்தைத் தேனீக்களுக்குள் ஒரு “குறள் தேனீ” தேடல்!

நிலைகள் மற்றும் வயது வரம்பு (Levels and Age limits)

நிலைகள் வயது வரம்பு# குறள்களின் எண்ணிக்கை
அரும்புகள் 8 வயது வரை# 35 குறள்கள்
மலர்கள் 12 வயது வரை# 70 குறள்கள்
கனிகள் 17 வயது வரை# 100 குறள்கள்

# சூன் 30, 2019 அன்று வயது.

பதிவு விவரம்

 • குறள் தேனீ போட்டிகள் தனித்திறன் மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி
 • வரையறுக்கப்பட்ட வயது வரம்பில் வரும் எவர் வேண்டுமானாலும் போட்டியில் பங்குபெறலாம்
 • இந்தப் போட்டியில் பங்குபெற விரும்புகின்ற குழந்தைகளின் பெற்றோர் இந்த பக்கத்திலுள்ள பதிவு இணைப்பின் வழியாக பதிவு செய்திடவும்
 • ஒரு குழந்தை ஒரு நிலையில் மட்டுமே பங்குபெற இயலும்
 • தங்களது வயதையும் தாண்டி குறள் ஆர்வத்தில், தன் திறனை நம்பும் பங்கேற்பாளர் அடுத்த நிலையில் போட்டியிட பதிவு செய்யலாம். ஒருமுறை பதிவு செய்த நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாற அனுமதி கிடையாது. பங்கேற்பாளர் இறுதி வரை பதிவு செய்த நிலையில் மட்டுமே போட்டியிட இயலும்.
  உதாரணம்: ஒரு ஏழு(7) வயது குழந்தை, தன்னம்பிக்கை மற்றும் தனித்திறன் காரணமாக மலர்கள் நிலையில் போட்டியிட விரும்பினால், அதற்கு அனுமதி உண்டு. அவர் போட்டிகளின் இறுதி வரை மலர்கள் நிலையில் மட்டுமே பங்கேற்க இயலும்
 • போட்டிகளுக்கான பதிவுக்கட்டணம் 10 வெள்ளிகள் ($10 USD). இந்த கட்டணம் போட்டி பரிசுகளின் நிதியில் சேர்க்கப்படும்
 • இறுதிப் போட்டிகள் அனைத்தும் பேரவை விழா அரங்கில் நடைபெறும். எனவே பங்கேற்பாளர் பேரவை விழா நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்திருத்தல் அவசியம்

அணி விவரம்

 • குறள் தேனீ போட்டி தனிப் போட்டியாளர்களுக்கான (individual competition) போட்டி
 • அணியாக போட்டியித் தேவையில்லை

போட்டி வடிவம்

 • போட்டியில் பங்கு பெரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு போட்டி வடிவம் பின்னர் அறிவிக்கப்படும்

மதிப்பெண் விதிகள்

 • குறளினை ஒப்பிக்கும் போது ஏற்படுகின்ற தவறுகள் சுழி மதிப்பெண்களை பெற்றுத்தரும்
 • குறளின் பொருள் மாறுபட்டால் அல்லது வேறு பொருள்பட்டால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்
 • குறள்களை தெளிவாக கூறிடல் வேண்டும். தெளிவின்மை அல்லது உச்சரிப்பில் தவறுகள் ஏற்படின் மதிப்பெண்கள் குறைக்கப்படும்
 • ஒவ்வொரு நிலையிலும் அதிக மதிப்பெண் எடுக்கும் 5 குழந்தைகள் இறுதிப்போட்டிகளில் பங்கேற்பர்
 • பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்
 • நடுவர்களின் முடிவே இறுதியானது

போட்டி தேதி / இடம்

 • அனைத்து போட்டிகளும் பேரவை விழாவில் சூலை 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடத்தப்படும்
 • இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு சூலை- 5 ஆம் தேதி பேரவை மேடையில் நடத்தப்படும்

பரிசு விவரம்

 • ஒவ்வொரு நிலையிலும் முதல் ஐந்து இடங்களை பெரும் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்படும்
 • பரிசுத் தொகை பின்னர் அறிவிக்கப்படும்
 • வெற்றி பெற்றவர்களும், பங்கு பெற்றவர்களும் பேரவை மேடைக்கு வரவழைக்கப்பட்டு வாழ்த்தி, ஊக்குவிக்கப்படுவார்கள்

பதிவு செய்ய

 • பதிவு செய்ய (To Register) இறுதி நாள் 31.மே.2019

தொடர்பு கொள்ள

போட்டிக்கான கையேடு (Guideline)