சேர்ந்திசை தமிழ் பண் கலை நிகழ்ச்சி 'முரசு'

முரசு2019-03-07T06:36:02+00:00

அன்புடையீர் வணக்கம் !!

உலகத் தமிழ் மாநாடு சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை , 2019இல் நடக்க இருக்கிறது. உங்கள் அனைவரின் வரவையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

இந்த விழாவில் டாக்டர் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் அவர்களின் மாபெரும் சேர்ந்திசை தமிழ் பண் கலை நிகழ்ச்சி ‘முரசு’ நடைபெற இருக்கின்றது. இந்த சேர்ந்திசையில் இருநூறுக்கும் மேற்பட்ட பாடகர்கள், இசை மற்றும் நடன கலைஞர்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க காலம் தொட்டு இந்நாள் தமிழ் இலக்கியங்களில் உள்ள இசையின் மேன்மையை உங்கள் முன் படைக்க உள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் பங்கு பெற அனைத்து அமெரிக்க மாநிலங்களில் இருந்து நன்கு பாடும் திறன் (திறமையான பாடகர்கள்) உடையவர்களை வரவேற்கிறோம்.

தங்கள் மாநிலத்தில் நன்கு திறன்பட பாடும் கலைஞர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை 1/5/19 தேதிக்குள் கீழ்வறும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Email id: murasumusician@googlegroups.com

நன்றி,
முரசு குழு

பதிவு செய் (Register Here)