குறள் தேனீ மற்றும் தமிழ்த் தேனீ போட்டி அழைப்பு2019-02-24T05:05:44+00:00
பதிவு செய் (Register Here)

குறள் தேனீ

அமெரிக்க மண்ணில், வள்ளுவரின் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் புகழ் ஓங்க தமிழ்ச்சங்கப் பேரவை மேடையில் உங்கள் குழந்தைகளின் திருக்குறள் திறன் ஒளிர குழந்தைத் தேனீக்களுக்குள் ஒரு “குறள் தேனீ” தேடல்!

நிலைகள் மற்றும் வயது வரம்பு (Levels and Age limits)

நிலைகள் வயது வரம்பு குறள்களின் எண்ணிக்கை +
அரும்புகள் 8 வயது வரை 35 குறள்கள்*
மலர்கள் 12 வயது வரை 70 குறள்கள்*
கனிகள் 17 வயது வரை 100 குறள்கள்*

* குறள்கள், குறளின் பொருள், குறளில் உள்ள சொற்கள், குறள் சொற்களின் பல பொருள்கள், திருக்குறள் பற்றிய பொது அறிவுக்கேள்விகள், அக்கேள்விகளுக்கான பதில்கள் இவை அனைத்தும் பதிவு செய்த போட்டியாளர்களுக்கு பதிவுத் தேதி முடிந்தவுடன் வழங்கப்படும்.
+ பல அணிகள் சம மதிப்பெண்கள் பெற்றால், அதை தவிர்க்க (Tie-breaker) “சவால் சுற்று” கேள்விகள் கேட்கப்படும். அதற்கான விவரங்கள் போட்டி விதிகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அணி விவரம்

 • குறள் தேனீ போட்டி தனிப் போட்டியாளர்களுக்கான (individual competition) போட்டி.
 • அணியாக போட்டியித் தேவையில்லை

கேள்வி வடிவம்

 • குறளின் முதல் சொல்லை வைத்து குறள் கூறுதல்
 • குறளுக்கு பொருள் கூறுதல்
 • கொடுக்கப்படும் பொருளுக்கான குறளும், ஆங்கிலப்பொருளும் கூறுதல்
 • குறளில் உள்ள ஏதாவது ஒரு சொல்லை வைத்து குறள் கூறுதல்
 • குறளின் அதிகாரம் என்ன என கூறுதல்
 • குறளில் உள்ள ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் கூறுதல்
 • திருக்குறள் பற்றிய பொது அறிவுக்கேள்வி-பதில்கள்

போட்டி வடிவம்

 • ஒவ்வொரு சுற்றிலும் மூன்று கேள்விகள் கேட்கப்படும்
 • அனைத்து போட்டிகளும் பேரவை விழாவில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும்.
 • இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு பேரவை மேடையில் நடத்தப்படும்.

பரிசு விவரம்

 • ஒவ்வொரு நிலையிலும் முதல் ஐந்து இடங்களை பெரும் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்படும்
 • பரிசுத் தொகை பின்னர் அறிவிக்கப்படும்
 • வெற்றி பெற்றவர்களும், பங்கு பெற்றவர்களும் பேரவை மேடைக்கு வரவழைக்கப்பட்டு வாழ்த்தி, ஊக்குவிக்கப்படுவார்கள்

பதிவு விவரம்

 • சிகாகோவில் நடை பெரும் பேரவை விழாவில் பங்கு பெரும் திட்டமுள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்
 • பங்கு பெரும் மாணாக்கரின் பெற்றோர் பதிவு செய்ய வேண்டும்
 • பதிவுக்கட்டணம் ஒவ்வொரு மாணாக்கருக்கும் 10 வெள்ளிகள் ($10)

பதிவு செய்ய

தொடர்பு கொள்ள

தமிழ்த்தேனீ

தேன் தமிழைத் தெளிவுறக் கற்ற நற்றமிழ்ச் செல்வங்களுக்கு அத்தமிழ்த் திறனை தரணிக்குக் காட்டிட முப்பெரும் விழாவில் தனிப்பெரும் வாய்ப்பு – குழந்தைத் தேனீக்களுக்குள் ஒரு “தமிழ்த் தேனீ” தேடல்!

நிலைகள் மற்றும் வயது வரம்பு (Levels and Age limits)

(தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே “தமிழ்த் தேனீ” போட்டியில் பங்கு பெறலாம்)

நிலைகள் வயது வரம்பு கேள்வி வடிவம் +
அரும்புகள் 8 வயது வரை
 • படங்கள் பார்த்துஅவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்கள் கூறுதல்
 • ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கூறுதல்
மலர்கள் 12 வயது வரை
 • தமிழ்ச் சொற்களை தவறின்றிப் படித்து ஆங்கிலப் பொருள்கள் கூறுதல
 • பொது அறிவு வினாடி வினா (முற்றிலும் தமிழில்)*
கனிகள் 17 வயது வரை
 • பொது அறிவு வினாடி வினா (முற்றிலும் தமிழில்)*
 • “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” வடிவத்தில் தமிழ்ச் சொல் விளையாட்டு*

* இதற்குண்டான சொல் வங்கியும் கேள்வி பதிலும் முன்னமே வழங்கப்படும்
+ பல அணிகள் சம மதிப்பெண்கள் பெற்றால், அதை தவிர்க்க (Tie-breaker) “சவால் சுற்று” நடத்தப்படும். அதற்கான விவரங்கள் போட்டி விதிகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன

அணி விவரம் (தமிழ்த் தேனீக்கு மட்டும்)

 • ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும்
 • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் மூன்று அணிகள் (ஒவ்வொரு நிலையிலும் முதலிடம் பெரும் அணி) மண்டலப் போட்டிக்கு (Zonal Competition) அனுமதிக்கப்படுவார்கள்
 • ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு நிலைக்கான வயது வரம்பில் உள்ள இரண்டு மாணாக்கர்கள் பங்கெடுக்கலாம்

போட்டி வடிவம்

 • போட்டிகள் பள்ளி நிலை, மண்டல நிலை, அரை இறுதி, இறுதிப்போட்டி என நான்கு நிலைகளாக நடத்தப்படும்
 • பள்ளி நிலைப் போட்டிகள் அவர்தம் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களாலேயே நடத்தப்படும்.
 • பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவையான உதாரண கேள்வி பதில்கள் வழங்கப்படும்.
 • மண்டலப் போட்டிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படும். மண்டலப் போட்டிகளுக்கான பாடத்திட்டம், கேள்வி பதில், மற்றும் உதாரணங்கள் பங்கேற்பாளர்களுக்கு முன்னமே கொடுக்கப்படும்.
 • ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் ஒவ்வொரு நிலையிலும் முதலிடம் பெரும் அணி, சிகாகோவில் நடைபெறும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் .
 • அரை இறுதிப்போட்டியில் ஒவ்வொரு நிலையிலும் முதல் நான்கு இடங்களை பெரும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
 • இறுதிப்போட்டியின் மதிப்பெண்களை கணக்கிட்டு ஒவ்வொரு நிலையிலும் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு பெரும் அணிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்படும்.

பரிசு விவரம்

 • ஒவ்வொரு நிலையிலும் முதல் நான்கு இடங்களை பெரும் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்படும்
 • பரிசுத் தொகை பின்னர் அறிவிக்கப்படும்
 • பேரவை விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களும், அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டியில் பங்கு பெற்றவர்களும் பேரவை மேடைக்கு வரவழைக்கப்பட்டு வாழ்த்தி, ஊக்குவிக்கப்படுவார்கள்

பதிவு விவரம்

 • சிகாகோவில் நடை பெரும் பேரவை விழாவில் பங்கு பெரும் திட்டமுள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்
 • பள்ளி நிலைப் போட்டிகள் முடிந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.
 • பதிவுக்கட்டணம் ஒவ்வொரு மாணாக்கருக்கும் 10 வெள்ளிகள் ($10)

பதிவு செய்ய

தொடர்பு கொள்ள