ஸ்டாலின் குணசேகரன்2019-05-08T03:00:49+00:00

Project Description

ஸ்டாலின் குணசேகரன்
ஸ்டாலின் குணசேகரன்
பேச்சாளர், எழுத்தாளர்
அறிமுகம்

புத்தக வாசிப்பில் தீராத காதல் கொண்டவர். 2005 முதல் ஈரோடு நகரில் புத்தகத் திருவிழா நடத்தி வருபவர். சிறந்த மேடை பேச்சாளர். எழுத்தாளர். வழக்கறிஞர் என பன்முகத் திறமையாளர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பெரும் பங்கை  விடுதலை வேள்வியில் தமிழகம்என்கிற ஆய்வு நூலாக தொகுத்தவர். பொதுவுடமை, தேசிய உணர்வு ஆகிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அவற்றின் வழி இலட்சிய மனிதராக வலம் வருபவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இளைய சமுதாயத்தின் ஒன்றிணைந்த வலிமையில் பெரும் நம்பிக்கை கொண்ட இவர் பாரதி இளைஞர் மன்றம்பகத்சிங் இளைஞர் மன்றம், இளைஞர் எழுச்சி இயக்கம், போன்ற பொது இளைஞர் அமைப்புகளை நிறுவி தமிழக இளைஞர்களுக்கு சமூக அறத்தை போற்றும் சிந்தனைகளை ஊக்குவித்து வருபவர். மக்கள் சிந்தனைப் பேரவை என்ற சமூக நல அமைப்பின் தலைவர்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் – பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்.

சிறப்பு

கலை, இலக்கியம், மொழி, வரலாறு மற்றும் சமூகவியல் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்.

17 ஆண்டுகளுக்கு மேல் பொதுசேவையில் ஈடுபட்டுவருபவர். பல்வேறு அமைப்புகள் 35 விருதுகளுக்கு மேல் வழங்கி இவரது சமூகப் பணியை சிறப்பித்துள்ளது.