சீர்காழி சிவசிதம்பரம்2019-05-07T23:42:21+00:00

Project Description

சீர்காழி சிவசிதம்பரம்
சீர்காழி சிவசிதம்பரம்
இசை பேரறிஞர்
அறிமுகம்

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர். திரைப் பாடகர். மேற்கத்திய இசையையும் கற்றறிந்தவர். மருத்துவர், சென்னை மருத்துவ கல்லூரியின் இயக்குனராக பணியாற்றியவர். பெரம்பலூர் மருத்துவ கல்லூரியின் தற்போதைய சிறப்பு இயக்குனர்.  

“எனதருமை ராணுவ வீரர்கள்” என்ற தலைப்பில் டாக்டர் அப்துல் காலம் அய்யா அவர்கள் எழுதிய பாடலுக்கு இசை/குரல் வடிவம் கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர்.

தனது தந்தை இசைமணி  Dr.சீர்காழி S.கோவிந்தராஜன் அவர்களின் பெயரில் மருத்துவ சேவையும், கல்வி சேவையும் செய்யும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

சிறப்பு

இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி, கர்நாடக அரசின் ஆர்யபட்டா, தமிழ் இசை வேந்தர்,  இசை பேரறிஞர் என பல விருதுகளை பெற்றவர்.