சு. வெங்கடேசன்2019-05-08T05:57:58+00:00

Project Description

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்
எழுத்தாளர்
அறிமுகம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் புதின எழுத்தாளர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் 600 ஆண்டு கால (1310 -1920 )   வரலாற்றை “காவல் கோட்டம்” என்ற தனது முதல் புத்தகத்தில் படம் பிடித்தவர். இலக்கியத்தோடு இயற்கையையும் நேசிப்பவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர். புதினம், சிறுகதை, கவிதை , கட்டுரை என்று பல தளங்களில் முத்திரை பதித்த படைப்பாளி. தனது படைப்புகளில் தமிழின் தொன்மையையும் பண்பாட்டையும் மிடுக்குடன் மிளிரச் செய்வது இவரது தனிச் சிறப்பு.

தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை. நேரடியான  பண்பாட்டுக் களத்திலும்,  அரசியல் களத்திலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்.

சிறப்பு

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு துணை நின்றவர். கீழடியை உலகளவில் கொண்டு சென்றவர்களில் ஒருவர்.  

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக, தமிழர் பண்பாட்டு, பாதுகாப்பு இயக்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர்.