மணியம் செல்வன்2019-05-08T03:25:24+00:00

Project Description

மணியம் செல்வன்
மணியம் செல்வன்
ஓவியர்
அறிமுகம்

புகழ் பெற்ற தமிழ் ஓவியர். நீர்வண்ணங்களை கொண்டு உயிரோட்டத்துடன் ஓவியம் வரைவதில் தனக்கென தனியொரு முத்திரையை பதித்த வித்தகர்.

சென்னை ஓவியம் மற்றும் கைவினைக் கலைக் கல்லூரியின் மாணவர்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு பரப்புரைத் திட்டங்களுக்கு ஓவியராகவும், உடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்கி இதழில் சிவகாமியின் சபதம் மறுபதிப்பிற்கும் குழந்தைகளுக்காக சுஜாதாவின் பூக்குட்டி மற்றும் மடிசார் மாமி ஆகிய தொடர்கதைகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றவை.

முப்பரிணாம அசைப்படங்களுக்கும் ஓவியம் வரைந்துள்ளார்.

சிறப்பு

ஓவியப் பணிக்காக இந்திய அரசின் என். சி. ஈ. ஆர். டி விருது பெற்றவர்.