பன்னாட்டு ஓவியப் போட்டி 2020

 

உலக ஓவியமணிகளே, உங்கள் ஓவியத் திறமைக்கு ஒரு வாய்ப்பும் அங்கீகாரமும், தமிழின பண்பாட்டு விழுமியங்களின் பெட்டகமான சங்ககால இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ள நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டுவர FeTNA வின் பன்னாட்டு ஓவியப் போட்டிக் களத்திற்கு உங்கள் விரல்வழிக் காட்சி வடிவம் அளிக்க வண்ணங்களோடும் எண்ணங்களோடும் வாருங்கள்.

கோடுகளோடும் கோலங்களோடும் தூரிகையால் உங்கள் ஓவிய மொழியில் எங்கள் தமிழ் நளினங்களைத் தாருங்கள்.

உங்கள் தூரிகையால் புறநானூறு பாடல் உயிர் பெறட்டும்.

நாடு ஆகு ஒன்றோ
காடு ஆகு ஒன்றோ
அவல் ஆகு ஒன்றோ
மிசை ஆகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை;
வாழிய நிலனே!
___ ஒளவையார்
( புறநானூறு_187)

Whether you grow rice
Or
Whether you are a forest,
Whether you are a valley
Or
Whether you are a mountain,
If they are good men
Who inhabit you,
Then you are good,land!
And may you long flourish!
– George .L III Hart (English)

போட்டி விதிமுறைகள்:-

 1. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
 2. போட்டியில் கலந்து கொள்ள நுழைவுக்கட்டணம் இல்லை.
 3. இரண்டு ஓவியங்களை முதலில் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
 4. தேர்வாகும் ஓவியங்களைப் போட்டியாளர்களின் சொந்தசெலவில் இரு கேன்வாஸ் ஓவியங்களாகக் குழலில் அனுப்ப வேண்டும்.
 5. ஓர் ஓவியம் போட்டியாளரின் சொந்த தலைப்பாக இருக்கலாம், இரண்டாவது ஓவியம் கொடுக்கப்பட்ட தலைப்பின் அடிப்படையில் இருக்கவேண்டும்.
 6. போட்டிக்கு அனுப்பிய ஓவியங்கள் எந்த காரணத்தை கொண்டும் திரும்பி அனுப்பப்படமாட்டாது.
 7. போட்டிக்கு வரும் ஓவியங்கள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் உரிமைக்கு உட்பட்டது.
 8. போட்டியில் பங்கேற்க 18 வயது நிரம்பியிருக்கவேண்டும்.
 9. எம்முறையிலும் ஓவியம் வரைந்து மின்னஞ்சலில் அனுப்பலாம்.
 10. தேர்வு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஓவியங்கள் நான்கு A4 அளவில் Canvasல் எம்முறையிலிலும் வரைந்து குழல் மூலம் அஞ்சலில் அட்லாண்டா முகவரிக்கு அனுப்பவேண்டும்.
 11. கேன்வாசு(Canvas) அளவு :Double A3, ஊடகம்(Medium) : Any Medium.
 12. ஓவியங்களை முதலில் இந்த atlantaworldart2020@fetna.org என்கின்ற மின்னஞ்சலுக்கு மார்ச் 25ந் தேதிக்குள் அனுப்பவும்.

தொடர்புக்கு:
Email Id: atlantaworldart2020@fetna.org
Phone Number : +1 (734) 927-2034, +1 (201) 367-8589,+1 (331) 980-9193, +91 76959-92100

ஓவியப் போட்டி