Malar2019-03-18T04:46:13+00:00

நமது பேரவையின் 32-வது தமிழ் விழாவையொட்டி ஆண்டு  மலர் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு இது ஒரு சிறப்பு மலர்! இந்த மலர்  மூன்று சிறப்புகளை உள்ளடக்கியது:

 1. பேரவையின் 32-ஆம் தமிழ் விழா
 2. 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
 3. சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-வது ஆண்டு விழா

இம்மலரில் வெளியிட கீழ்க்கண்ட பெரும்பிரிவுகள் / தலைப்புகளில் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகளுக்கான தலைப்புகள் [Suggested Topics for Articles]

 1. 2019 பேரவை விழா கருப்பொருள்:
  கீழடி நம் தாய்மடி
 2. 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு- கருப்பொருள்:

  “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல், மற்றும் தமிழ் நவீன இலக்கியம், தமிழ்க் கணிமை பற்றிய கண்ணோட்டம்” – இவற்றை மையமாக வைத்துப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

 3. சிகாகோ தமிழ்ச் சங்கம் தொடர்பான சிறப்புக் கட்டுரைகள்
 4. கீழ்க்கண்ட பட்டியலில் இருந்து ஏதோ ஒன்றைச் சார்ந்தும் கூட உங்கள் படைப்புகள் இருக்கலாம்:
  • உலகம் இதுவரை கண்டிராத சுற்றுச் சூழல் மாசுபாட்டுள்ள நிலையில்,
   பல்லுயிர் ஓம்புதலை (Bio Diversity) மேம்படுத்த அன்றாட வாழ்வியல் முறைகளில் செய்யப் பட வேண்டிய மாற்றங்கள்.
  • இன்றைய பொருளாதார உலகில், பள்ளி நாட்களிலேயே இளையோருக்கான பொருளாதார மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த, மூத்தோர் சமூகம் எப்படியெல்லாம் அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர இயலும்.
  • பெரும் சவாலாக உருவாகியுள்ள முதியோர் பராமரிப்பு என்பதை எப்படியெல்லாம் வெற்றிகரமாகக் கையாள முடியும். உலகில் என்ன என்ன செயல் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
  • பழங்காலத் தமிழர்கள் செய்த அத்தனை முனைப்புகளுள் பொதிந்துள்ள பொதுக் காரணிகள் (common reasons) , மையக் காரணி அல்லது சிறப்புக் காரணி (target reason or exclusive reason) பட்டியலிடலாம். இதன் மூலம் தமிழர் மேன்மையை எடுத்துக் கூறுதல்.
  • இளையோருக்கான எழுத்து ஆற்றலை மழலையிலேயே ஊக்கப்படுத்தும் வழி வகைகள் (நண்பர்களின் பிறந்தநாள் பரிசாக தற்கையெழுத்துப் படிகள் வழங்குவது) உட்பட என்ன என்ன உத்திகள்.
  • தன்னம்பிக்கையால் துயரங்களை வென்று பெருவெற்றி பெற்ற சாதனை மனிதர்கள் (குறிப்பாகப் பெண்கள்)
  • நல்ல பழமொழித் தொகுப்புகள்
  • அடுத்த நூற்றாண்டு வாழ்வியலைக் கட்டுப்படுத்தப் போகும் தொழில் நுட்பங்கள் (எடுத்துக்காட்டு – இந்த நூற்றாண்டில் இணையதளம் மற்றும் கைபேசிகள்). Artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) நம் அன்றாட வாழ்வில் எங்கெங்கு ஊடுருவியுள்ளது என்பதை எளிய நடையில் விளக்குதல்.
  • தமிழ் இலக்கியம் காட்டும் உளவியல் ஆறுதல்.
  • இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமை மற்றும் நம்மாழ்வார் வழியில் இயற்கை வேளாண்மை.
  • தமிழரும் வாணிபமும்
  • தமிழரும் தற்சார்ந்த பொருளாதாரமும்
 5. மற்றும், ஜூலை 2018 முதல் இன்று வரை நடந்துள்ள தமிழ், மற்றும் தமிழர்கள் சார்ந்த முக்கிய நிகழ்வுகள்.
  • ஆராய்ச்சி/ஆய்வுக் கட்டுரைகள்
  • ஈழம் படைப்புகள்
  • தமிழிசை மற்றும் தமிழ்த் திரைத்துறை சார்ந்த கட்டுரைகள்
  • பெட்டிச் செய்திகள்
  • தமிழிசைச் செய்திகள்
  • தமிழ்த்துறை உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
  • அமெரிக்காவில் வெளியாகும் தமிழ் மடல்கள், இதழ்கள்
  • அமெரிக்கத் தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
  • அமெரிக்காவில் தமிழ்க் கல்வி
  • சாதனைத் தமிழர்கள்
 6. தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும் தொண்டு செய்து, அண்மையில் மறைந்த தமிழர்களைப் பற்றி பெட்டிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன (எடுத்துக்காட்டாக, கலைஞர் கருணாநிதி,நெல் ஜெயராமன், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர் பிரபஞ்சன், கூத்துப் பட்டறை ந. முத்துசாமி போன்றோர்).

படைப்புகளுக்கான வரைமுறைகள்

 1. அனைத்து படைப்புகளும் FeTNA 2019 இதழுக்காகப் படைக்கப்பட்டு, வேறு எங்கும் வெளியிடப்படாத படைப்புகளாக இருத்தல் வேண்டும். படைப்புகள் முடிந்த அளவு வேற்று மொழிச் சொற்கள் கலக்காமல், தமிழில் இருக்க வேண்டும்
 2. படைப்புகள் கதை, கவிதை, கட்டுரை என இருக்கலாம்
 3. படைப்புகள் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் [750 சொற்கள்]
 4. படைப்புகளில் அரசியல், மதம், தனி மனித விமர்சனங்களைத் தவிர்த்தல் அவசியம்
 5. படைப்புகள் அற வழியில் இருக்க வேண்டும்
 6. படைப்புகள் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode), தொகுத்து இருக்க வேண்டும்
 7. படைப்புகள் MS-Word Format – இல் இருத்தல் அவசியம். PDF கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
 8. படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@fetna.org
 9. படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – ஏப்ரல் 15, 2019