Manalmagudi Drama



இயல், இசை,நாடகம் என்னும் முப்பொருளை பெரும் பண்பாடாய்ப்போற்றி கொண்டாடும் மொழிப் பாரம்பரிய இலக்கிய வழிப் பெருமிதம் கொண்டது நம் தமிழ் நிலம். இன்றைய மெய்நிகர் உலகின் திரைக்கலை உள்ளிட்ட இசை நடனமெனும் முக்கிய கலைவடிவங்கள் அனைத்திற்கும் ஆதி வேரான தொன்கலை நாடகம்.

இந்த நாடகமெனும் ஆதி கலையின் வேர்களை மீட்டு,செழுமையாக்கி இன்றைய நவீன உலகின் பார்வையாளனுக்கு திரட்டித்தரும் கலைப்பணியை செயல்நோக்கமாக்கி, மணல்மகுடி நாடக நிலம் குழு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நிலத்தின் மரபுசார்ந்த தொன் சடங்குகளை, இசைவடிவங்களை கலைப் பண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து அவற்றிலிருந்து நவீன நாடகமொழியை உருவாக்கி தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் பல்வேறு நாடகநிகழ்வுகளில் நவீன நாடகங்களை நிகழ்த்திவருகிறது.

பல்வேறு குழந்தைகள், நாடகங்கள், நவீன நாடகங்கள் , நாடக கலைப்பண்பாட்டு பயிற்சிப்பட்டறைகள், நாடககலையாக்கம் தொடர்பாக ஆய்வுகள் என கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நவீன நாடக குழுவாக மணல்மகுடி தமிழ்நிலத்தின் தொன் கலைவெளியில் தனது இருப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

இருபதிற்கும் மேலான முழுநாடகங்கள், முப்பதிற்கும் மேலான குழந்தைகள் நாடகங்கள் என தமிழகம் முழுவதும் 150-ற்கும் மேலாகவும் இந்தியாமுழுவதில் இருபதிற்கும் மேலாகவும் எங்கள் நாடககுழு நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.

இந்தக்கலைப் பணியினை பாராட்டி இந்திய மத்திய அரசு கலை மற்றும் நாடகத்துறையில் வழங்கும் சிறந்த நாடக ஆசிரியருக்கான ”உஸ்தாத் பிஸ்மில்லாக்கான் யுவ புரஸ்கார்” தேசிய விருதை 2011 ஆம் ஆண்டு எங்கள் நாடக ஆசிரியர் ச.முருகபூபதி அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது.

தமிழ் நிலத்தின் தொன்கலையான நாடகத்தினை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்குநர் ச.முருகபூபதியின் நாடகங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு சர்வதேச நாடக விழக்களில் பங்கேற்று கவனம் ஈர்த்தவை.

டெல்லி தேசிய நாடகப்பள்ளி (National School of Drama) ஆண்டுதோறும் நடத்தும் ”பாரத் ரங் மகா உத்சவ்” சர்வதேச நாடக விழாவில் செம்மூதாய்-2009, மிருகவிதுஷகம்- 2012, சூர்ப்பணங்கு-2013, குகைமரவசிகள்-2015 என நான்குமுறை தேர்வு செய்யப்பட்டு தமிழ் நிலத்தின் தொன்கலையான நாடகத்தை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தி நவீன தமிழ் நாடக செயற்பாட்டை தொடர்ச்சியாக இந்திய அளவில் கவனம் பெறச்செய்வதில் மிகத்தீவரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழு மணல்மகுடி நாடகநிலம்.

மணல்மகுடியின் நாடக கலைப்பயணத்தின் அடுத்த நகர்வாக கோவில்பட்டியில் நிலைத்த நாடககலைப்பயிற்சி பட்டரையை நிறுவி பயிற்சி வகுப்புகள், நாடகவிழாக்கள் என தொடர்ச்சியான கலைச்செயல்பாடுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தொன்கலையான நாடகத்தின் வழி தமிழ்நிலத்தின் தனித்துவப் பண்பாட்டை அடுத்ததலைமுறையின் நினைவடுக்குகளில் கொண்டுசேர்க்கும் பணியினை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.


Program Schedule



TEF Talk
TEF Talk
Read More
TEF Junior
TEF Junior
Read More
FeTNA Convention Main Event

Tamil Theni
Tamil Theni
Read More
Kural Theni
Kural Theni
Read More
Ambassador Program
Ambassador Program
Read More
Youth Competition
Youth Competition
Read More
Karuthukalam
Karuthukalam
Read More
Kaviyarangam
Kaviyarangam
Read More
ilakkiya-vinaadi-vinaa
Ilakkiya Vinaadi Vinaa
Read More
SANGANGALIN SANGAMAM
Sangangalin Sangamam
Read More
Star Night
Star Night
Read More
Manalmagudi Drama
Manalmagudi Drama
Read More
Short Film Contest
Short Film Contest
Read More
Art Workshop
Art Workshop
Read More
FeTNA Convention Main Event

Peravai Special Dance
Peravai Special Dance
Read More
Mangalavadhyam
Mangalavadhyam
Read More
Tap Awards
Tap Awards
Read More
CME
CME
Read More

Discussion with Donors/Sponsors & Guests
Discussion with Donors/Sponsors & Guests

Hosting Organizations

host1
host2

Texas Supporting Organizations


Click here to learn about FeTNA members organizations
volunteer