கவியரங்கம்

பதிவு


சங்கத்தமிழ் தொட்டு தற்காலத் தமிழ் வரை கவிதைகள் தமிழ்க் கவிஞர்களின் கற்பனைத் திறனையும், கவியாற்றலையும் எளிய வடிவிலும், வலிய வரிகளிலும் ஆவணப்படுத்தி வளர்ந்து நிற்கின்றது.

’யாயும் ஞாயும் யாரா கியரோ' எனக் காதல் கொஞ்சும் சங்ககாலச் செம்புலப்பெயல் நீராரின் கவியும் ’கற்ற பெண்களை இந்நாடுதன் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு எனும் புரட்சிக்கவியின் இருபதாம் நூற்றாண்டு வரிகளும், ’யானைகள் குரங்குகளைப் போல் கோலுக்குப் பயந்துகும்பிடத் துவங்கினால் எலிகள் புலிகளாவதை யாரால் தடுக்க முடியும்?’ என இருபத்தியோராம் நூற்றாண்டில் எளிய தமிழில் எதிர்க்குரல் எழுதும் யுகபாரதியின் கவிவரிகள் என தமிழ்க் கவிதையின் வரலாறு சீரிளமை கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய வரலாறு கொண்ட தமிழ்க் கவிதைக்கும், கவிதை படைக்கும் ஆற்றலுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் தமிழ் விழா ஒவ்வொரு ஆண்டும் ‘கவியரங்கம்’ நிகழ்வைப் பெருமையுடன் நடத்துகின்றது. அமெரிக்கா வாழ் தமிழர்களில் கவிதை எழுதும் ஆற்றல்கொண்ட கவிஞர்களுக்கு குறிப்பிட்ட தலைப்புகளில் கவிதை வடித்து மேடையில் வாசிக்கவும் வாய்ப்பைத் தரும் நிகழ்வாக இக்கவியரங்கம் நிகழ்வு அமைந்துள்ளது.இந்த ஆண்டு டாலசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆம் ஆண்டு தமிழ் விழாவில் தனது ‘வணக்கம் வள்ளுவ’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக இந்திய அரசின்சாகித்ய கலைக்கழகத்தின் விருதினைப் பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகின்றது.

அமெரிக்கா வாழ் தமிழ்க் கவிஞர்களுக்குக் கவிபாட மேடை அமைத்துக் கொடுக்கும் இந்நிகழ்வினை ஒருங்கிணைப்பதில் பேரவை பெருமை கொள்கின்றது.

கவியரங்கத்தில் பங்குபெற

  1. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதலில் பேரவை 2018 மாநாட்டுக்கு உங்கள் பெயர்களை உடனடியாகப் பதிவு செய்யுங்கள்.
  2. பின்னர் கவியரங்கத்தில் பங்குகொள்ள கீழே உள்ள இணைப்பில் பெயர்களை உடனடியாகப் பதிவு செய்யுங்கள். கருத்துக்களம் அல்லது கவியரங்கம் ஏதாவது ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். https://goo.gl/forms/LZwrBhQePrxLlLk52
  3. கவியரங்க ஒருங்கிணைப்பாளர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி பற்றிய தகவல்களைத் தெரிவிப்பர்.
  4. கவியரங்கத் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.


குறிப்பு: கவியரங்க நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிப்பாகப் பேரவை 2018 மாநாட்டுக்குப் பதிவு செய்திருக்கவேண்டும்.

நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kaviyarangam@fetna.org


அனுப்ப வேண்டிய இறுதிநாள்: ஏப்ரல் மாதம் 30th, 2018

Program Schedule



TEF Talk
TEF Talk
Read More
TEF Junior
TEF Junior
Read More
FeTNA Convention Main Event

Tamil Theni
Tamil Theni
Read More
Kural Theni
Kural Theni
Read More
Ambassador Program
Ambassador Program
Read More
Youth Competition
Youth Competition
Read More
Karuthukalam
Karuthukalam
Read More
Kaviyarangam
Kaviyarangam
Read More
ilakkiya-vinaadi-vinaa
Ilakkiya Vinaadi Vinaa
Read More
SANGANGALIN SANGAMAM
Sangangalin Sangamam
Read More
Star Night
Star Night
Read More
Manalmagudi Drama
Manalmagudi Drama
Read More
Short Film Contest
Short Film Contest
Read More
Art Workshop
Art Workshop
Read More
FeTNA Convention Main Event

Peravai Special Dance
Peravai Special Dance
Read More
Mangalavadhyam
Mangalavadhyam
Read More
Tap Awards
Tap Awards
Read More
CME
CME
Read More

Discussion with Donors/Sponsors & Guests
Discussion with Donors/Sponsors & Guests

Hosting Organizations

host1
host2

Texas Supporting Organizations


Click here to learn about FeTNA members organizations
volunteer