Peravai Special Dance"Narthaki Nataraj & Sakthi Bhaskar"

narthaki-bhaskar

மதுரையில் பிறந்த இவர், தன் திறமைகளை வளரத்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்த இடையறாது போராட்டங்களை சந்தித்துத் தாண்டி வந்த சாதனையாளர்.

தனது பாலினம் பற்றிய குழப்பம், குடும்பத்தினரும், சுற்றி இருந்த சமூகமும் காட்டிய எதிர்ப்பு, எதிர்கால வாழ்வைப் பற்றிய பயம், அழுத்தம் ஆகியவற்றைத் தனது முன்னேற்றத்திற்கான அடித்தளமாக மாற்றிக்கொண்டவர்.

தனது ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு, இவரும், தன்னைப் போலவே எண்ணம் கொண்ட இவரின் தோழி சக்தியும் தொடங்கிய நெடும் பயணம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா என அரங்கேற்றங்களாகவும் , விருதுகளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நர்த்தகியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவரைப் போலவே சக்தி அவர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. சக்தியும் மிகத் திறமையான நடனக் கலைஞர். இருவரின் வாழ்க்கையுலகம் நடனத்தைச் சுற்றி மட்டுமே சுழல்கிறது.

திரு கிட்டப்பா பிள்ளை அவர்களிடத்தில் பதினான்கு ஆண்டு காலம் பரதம் பயின்றவர். தனது குருவிற்கு உதவியாளராகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் நான்கு ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார்.

மரபு மாறாத பரதநாட்டியம் என்பதை தீவிரமாக்க் கடைபிடிக்கும் இவர் "நாயகி பவா", "மதுர பக்தி", "மாதுர்ய பக்தி" என பல்வேறு விதமாக அறியப்படும் நடன வகைக்கும், கி பி 19 நூற்றாண்டில் வாழ்ந்த "தஞ்சை நால்வர்" அறிமுகப்படுத்திய அரிய முத்திரைகளுக்கும் வாழும் களஞ்சியமாக உள்ளார்.

இலக்கியங்களில் தீராத தேடல் உள்ள நர்த்தகி, சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் முதலியவற்றில் இருந்து தனது நாட்டியப்படைப்புக்களை உருவாக்குகிறார்.

ஒவ்வொரு படைப்புக்கும், பாடலுக்கும், அதன் அர்த்தங்களை, வார்த்தைகளுக்குப் பின் உள்ள உணர்ச்சிகளை, பாடல் பாடப்பெற்ற சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துப் படிக்கும் இவர் அரிய புத்தகங்களைக் கொண்ட சிறிய நூலகத்தையும் தன்னிடம் வைத்துள்ளார்.

"தமிழ் அமுது", "சிவதரிசனம்","சக்திதரிசனம்", "குமாரவிஜயம்", "அரங்கன் வைபவம்" முதலியவை இவர் உருவாக்கிய படைப்புகள்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், ஜனாதிபதி அளித்த சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் கலைமாமணி, ஸ்ரீ கிருஷ்ண காண சபா அளித்த நிருத்ய சூடாமணி விருது, பிரசார் பாரதி விருது என இவரின் திறமைக்குச் சான்றாக அணிவகுத்து நிற்கின்றன இவர் வாங்கிய பட்டங்களும், விருதுகளும்.

இவரது நடனப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மூலம் தொடர்ந்து ஒலிக்கும் சலங்கை ஒலி இவரின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும், நிராகரிப்புகளுக்கும் பதிலாக உள்ளது.

தன்னைப்போல் பாலினம் மாறியவர்களைப் பெருமையும் சிறப்பும் கூட்டும் வகையில் "திருநங்கை" என்ற சொல்லை உருவாக்கிய மதிப்புறு முனைவர் திருநங்கை நர்த்தகி நடராசு அவர்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக நர்த்தகி நடராஜ் அவர்களை அழைப்பதில் பேரவை பெருமை கொள்கிறது.

இவரின் நாட்டியங்களின் காணொளிகள் சில


Program ScheduleTEF Talk
TEF Talk
Read More
TEF Junior
TEF Junior
Read More
Star Night
Star Night
Read More
FeTNA Convention Main Event

Ambassador Program
Ambassador Program
Read More
Youth Competition
Youth Competition
Read More
Karuthukalam
Karuthukalam
Read More
Kaviyarangam
Kaviyarangam
Read More
ilakkiya-vinaadi-vinaa
Ilakkiya Vinaadi Vinaa
Read More
Short Film Contest
Short Film Contest
Read More
Art Workshop
Art Workshop
Read More
FeTNA Convention Main Event

Peravai Special Dance
Peravai Special Dance
Read More
Mangalavadhyam
Mangalavadhyam
Read More
Tamil Theni
Tamil Theni
Read More
Kural Theni
Kural Theni
Read More
Manalmagudi Drama
Manalmagudi Drama
Read More
SANGANGALIN SANGAMAM
Sangangalin Sangamam
Read More
Tap Awards
Tap Awards
Read More
CME
CME
Read More
 Tamil Isai by Sanjay Subramanyan
Tamil Isai by Sanjay Subramanyan
Read More
 Tamil Isai by Sanjay Subramanyan
Muthamizh Vizha


Discussion with Donors/Sponsors & Guests
Discussion with Donors/Sponsors & Guests

Hosting Organizations

host1
host2

Texas Supporting Organizations


Click here to learn about FeTNA members organizations